Saturday 26 November 2011

வால் மார்டும்,மளிகை கடை அண்ணாச்சியும்

பலசரக்கு விற்பனையிலும் பன்னாட்டு நிறுவனங்கள் கால் பதிக்க அனுமதித்து இருக்கிறது மத்திய அரசு.
தங்கள் சுய லாபத்திற்காக இந்நாட்டின் நிலம்,காற்று,நீர் எல்லாவற்றையும் மாசு படுத்த காரணமான பெரு முதலாளிகள் பின்னர் நீருக்கும் பணம் பிடுங்கி மக்களை சுரண்டிக்கொண்டு உள்ளனர்.இப்பொழுது தங்களின் புதிய பங்காளிகளாக பன்னாட்டு நிறுவனங்களை இரு கரம் விரித்து வரவேற்கின்றனர்.இப்படி இந்திய முதலாளி வர்க்கம் தனக்குத் தானே தீ வைத்து கொள்வதற்கு நாம் குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட சாட்சிகளாக இருப்போம்.
தெருவுக்குத் தெரு கடை வைத்து மக்களில் ஒருவராக பிழைத்த சிறு வியாபாரிகள்,இந்திய பெரு முதலாளிகளான ரிலையன்ஸ்,பிர்லா போன்றவர்கள் சூப்பர் மார்கெட்,ஷாப்பிங் மால் போன்றவற்றை நிர்ணயித்ததால் கூலித் தொழிலாளர்களாக மாறி போனதற்கு நான்,நீங்கள் எல்லோரும் சாட்சிகள் தானே.இந்த சூப்பர் மார்கெட்,ஷாப்பிங் மால் எல்லாம் கூடிய சீக்கிரம் பன்னாட்டு கம்பனிகளால் விலை பேசப்பட்டு கபாளீகரம் செய்யப்படும்.
மளிகை கடை அண்ணாச்சிகளை பெரு முதலாளிகள் கூலித் தொழிலாளர்களாக மாற்றியதுப் போல,பன்னாட்டு நிறுவனங்கள் பெரு முதலாளிகளை தரகர்களாக தரம் இறக்கும்.
பன்னாட்டு நிறுவனங்கள் பலசரக்கு கடை திறப்பதால் இங்கு வேலை வாய்ப்பு பெருகும் என்கிறார் வர்த்தக அமைச்சர்.இந்த நிறுவனங்களின் தாய் வீடான அமெரிக்காவில் வரலாறு காணாத அளவு வேலை இல்லாதோர் சதவீதம் 15% ஆக அதிகரித்து மக்கள் கொந்தளித்து வீதிகளில் இறங்கி போராடி கொண்டு இருக்கும் செய்தி இவரை எட்ட வில்லை போலும்.
சீனா பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்து உள்ளதை காரணம் காட்டுகிறார்.சீனா ஒரு உற்பத்தி நாடு.அங்கு தயாரிப்பதை அங்கேயே விற்பனை செய்வதால்,உற்பத்தி பெருகும்,பொருளாதாரம் வளரும்.இந்தியா உற்பத்தி செய்வதை விட அதிகம் இறக்குமதி செய்து வரும் சூழலில் யார் இதனால் பயன் அடைவார் எனபது சிறுவர்களுக்கு கூட தெரியும்.
ஒரு விதத்தில் இது நல்லது தான்.தவிர்க்க இயலாத ஒரு புரட்சியை நோக்கி உலக மக்கள் உந்தப் பட்டு வரும் சூழ்நிலையில், 1000 உள்ளூர் முதலாளிகளை எதிர்த்து போராடுவதை விட அவர்களை விலைக்கு வாங்கவுள்ள 10 வெளிநாட்டு முதலாளிகளை எதிர்த்து நிற்பது எளிது.
இலக்குகள் குறைந்தால் வெற்றி எளிதாகும் தானே.
படம்: அமெரிக்க முதலாளி வர்க்கத்தை எதிர்த்து போராடும் ஒரு இளம் பெண் மீது மிளகு ஸ்ப்ரே அடிக்கும் போலீஸ் 

3 comments:

  1. மிளகு ஸ்பிரே அடிகிறதுக்கு முன்னாடியே சொன்னா ஒரு ஆப் - பாயில் ஆர்டர் பண்ணி இருப்போம்முல ?....

    ReplyDelete
  2. இந்திய பெரு முதலாளிகளின் சூப்பர் மார்க்கெட்டில் எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதாலும் மற்ற சிறிய கடைகளை விட கொஞ்சம் விலை குறைவாக கிடைப்பதாலும் மக்கள் மோகம் கொண்டு செல்கின்றனர். ஆனால் வாழ்வை இழந்த பல்லாயிரங்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளும் நம் மக்கள் என நாம் உணராதது கேவலம் !

    ReplyDelete
  3. நம் ஆட்சியாளர்களின் இலக்கு பணம் படைத்தவர்களை பெரும் பணக்காரர்கள் ஆக்குவது. ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்குவது தான்.

    ReplyDelete