Monday 28 November 2011

வெனிசுலா?

தென் அமெரிக்காவின் நாடுகளுள் ஒன்று வெனிசுலா.கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக ஹுகோ சாவேஸ் அதிபராக உள்ளார்.அதி தீவிர இடதுசாரி.
2003ம் ஆண்டு.
நாட்டை சுரண்டிக் கொண்டு இருந்த பன்னாட்டு எண்ணை நிறுவனங்களை நாட்டை விட்டு விரட்டி எண்ணை நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கினார்.ஆரம்பத்தில் இவரை கோமாளியாக சித்தரிக்க முயன்று இவரது அரசை கவிழ்த்த 'முன்னேறிய'நாடுகள்,தங்கள் முயற்சியில் தோற்று இவர் முன் வைத்த மக்கள் நல திட்டங்களை குறை கூறிக் கொண்டு இருந்தன.
இது 2011ம் ஆண்டு.
முதலாளித்துவத்தின் தாயகமான அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து நடு தெருவில் போராடி வருகின்றனர்.சிக்கன முயற்சி என்ற பெயரில் அமெரிக்க அரசு பல மக்கள் நல திட்டங்களை இரத்து செய்து வருகிறது.

வெனிசுலா?
 நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்கள் அனைவருக்கும் அவர்களின் ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம்நூறு அமெரிக்க டாலர் மதிப்பிற்கு குழந்தைகளை நலமாக வளர்க்கும் பொருட்டு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.(Rs.5100/-)
  கர்பிணி பெண்களுக்கு மாதம் நூறு அமெரிக்க டாலர் (Rs.5100/-)
   உடல் ஊனமுற்ற மாற்று திறனாளிகளுக்கு மாதம் 150அமெரிக்க டாலர் .(Rs.7550-)
    இத்தனைக்கும் அங்கு மக்களின் சராசரி மாத வருமானம் முந்நூறு டாலர்கள் தான்.(Rs.15000/-)
                எண்ணை நிறுவனங்களை நாட்டு உடைமை ஆக்கியதால் கிடைத்த வருமானம் அனைத்தும் முறையாக அணைத்து மக்களுக்கும் பகிர்ந்து வழங்கப் படுவதற்கான முதல் படி இது.லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
             கம்யூனிசம் தோற்று விட்டது,செத்து விட்டது என்று பேசுபவர்களுக்கு இது தான் பதில்.

3 comments:

  1. அப்படியே நம்ம புரட்சி தலைவி மாதிரி செயல் பட்டு இருக்கிறார் ....
    மணல் மாபியா கையில் இருந்த உரிமையை றது செய்து அரசுடைமை ஆக்கினார்
    லாட்டரி டிக்கட்டை ஒழித்து ஏழைகளின் வயிற்றில் பால் வார்த்தார்
    முடியாதுன்னு சொன்ன புதிய வீராணம் திட்டத்தை ஐந்து ஆண்டு கால ஆட்சிக்குள் முடித்தார்
    மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல் படுத்தினார்
    மாணவர்களுக்கு இலவச சைக்கிள் , லேப்டாப் வழங்கினார் ... இப்படி சொல்லி கிட்டே போகலாம்.
    என்ன நமக்குதான் கை வலிக்கும்......

    ReplyDelete
  2. அவர்கள் பின்பற்றுவது சோசலிசத்தை அதனால்தான் அப்படி மாற்றம் அங்கு நிகழ்கிறது. my blog is suthirche.blogspot.com. just read that.

    ReplyDelete
  3. எனக்கும் சில ஐடியா இருக்கு. ஆனால் எனக்கு நேரமில்லை எப்போ டைம் கிடைத்தாலும் Communism சம்மந்தமா facebook and நான் இன்னொரு blog ready பண்ணிட்டு இருக்கேன். அது create பண்ணுனதும் சொல்றேன். my blog suthirche.blogspot.com

    ReplyDelete