Monday 28 November 2011

உயிருக்கு ஆபத்தான நிலையில் தினமலர் நிருபர்;டைலர் கடையில் அனுமதி


உயிருக்கு ஆபத்தான நிலையில் தினமலர் நிருபர்;டைலர் கடையில் அனுமதி 
கும்ப்ரிகாம்பேட்டை,நவ.31
                           தமிழ் உணர்வாளர்கள் நடத்திய கூட்டதிற்கு செய்தி சேகரிக்க சென்ற தினமலர் நிருபரை அடையாளம் கண்டு கொண்ட தமிழ் உணர்வாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்து இருந்த பேட்டை ரௌடிகள் மற்றும் பிக்பாக்கெட் திருடர்கள் கொலை செய்யும் நோக்கத்துடன் நமது நிருபரை நோக்கி கேள்வி எழுப்பினர்.சற்றும் அசராத நமது நிருபர் ஐயோ,அம்மா விட்ருங்க ஏதும் செஞ்சுராதீங்க என போர்க்குரல் எழுப்பினார்.நிருபரின் வீரத்தைக் கண்டு அஞ்சிய கூட்டத்தினர் நிருபரை நெருங்கவும்,தயவு செஞ்சு அடிக்காதீங்க என அதே வீரத்துடன் கைகளை உயர்த்தினார்.இந்த கொலை முயற்சியில் ஏற்கனவே தையல் விட்டுருந்த அக்குள் பகுதியில் நமது நிருபரின் சட்டை 10 cm அளவிற்கு கிழிந்து விட்டது.இதனால் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயல் டைலர் கடையில் நமது நிருபர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அடுத்த கொலை முயற்சி:
                        மதுரை பகுதியில் நடந்த இதே போன்ற ஒரு கூட்டதிற்கு செய்தி சேகரிக்க சென்ற நமது மற்று ஒரு நிருபர் கூட்டத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட பிறகு,யாருக்கும் அஞ்சாமல் வெகு வேகமாக தப்பி ஓடியுள்ளார்.அவரை வாகனங்களில் துரத்திய கூட்டத்தினர் அவர் மீது வாகனத்தை ஏற்றி கொல்லும் முடிவில் இருந்ததாகவும், பொதுவாக பன்றிகள் மீது வாகனம் ஏறினால் நல்லது அல்ல என்ற இந்து மத சம்பிராதயப்படி அவர்கள் பின் வாங்கி சென்று விட்டதாகவும் தெரிகிறது.இப்படியாக இந்து மதம் தனது உயிரை காப்பற்றியது என நிருபர் நன்றியுடன் தெரிவித்தார்.

3 comments:

  1. நல்ல நகைச்சுவை! தொடருங்கள்!

    ReplyDelete
  2. மாற்று கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்பதற்காக, நகைச்சுவை என்ற பெயரில் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை(பன்றி.........) பயன்படுத்துவதை தவிர்க்கலாமே ?

    ReplyDelete
  3. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
    Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…

    இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete